பித்ரு சிரார்த்த மையம்

பித்ருக்களை வருடந்தோறும் புஜிப்பது நமது குடும்ப மேன்மைக்கே.

த4ன்யம் யஶ்ஶ்யம் ஆயுஷ்யம் 
ஸ்வர்க3ம் சத்ரு வினாஶனம் | குல 
சந்தாரகம் சேதி ஶ்ராத்த4மாஹுர் மணீ ஷிண : ||

 

பித்ருக்கள்(மூதாதையர்கள்) சிரத்தையுடன் செய்யப்படும் சிரார்த்தத்தால் மகிழ்ந்து, தன தான்ய செல்வங்கள் புகழ் நீண்ட ஆயுள் இனிமையான வாழ்வு எதிரிகளற்ற வாழ்வு, நல் சந்ததிகள்(குழந்தைசெல்வம்) ஆகியவற்றை வழிபடுபவர்களுக்கு (வாரிசுகளுக்கு) வழங்குகிறார்கள்.

பித்ருக்களின் ஆசிகள் நிறைந்து நமது குடும்பத்திற்கு கிடைக்க வருடந்தோறும் நமது மூதாதையர்களை வழிபட வேண்டும். பார்வன ஹோம ஸ்ரார்த்தம், சங்கல்ப ஸ்ரார்த்தம், இரண்ய ஸ்ரார்த்தம், ஆம ஸ்ரார்த்தம், தில தர்ப்பண ஸ்ரார்த்தம் என்று ஐந்து விதமான ஸ்ரார்த்தங்கள் இருந்தாலும் மிகச் சிறந்த புண்ணியத்தை, பலனை, பித்ருக்களின் ஆசியை கொடுக்க வல்லது பார்வன ஹோம ஸ்ரார்த்தமே. 

பார்வன ஹோம ஸ்ரார்த்தத்தில் பித்ருக்களுக்கு ஹோமம், ப்ராமண போஜனம், அர்க்யம், பிண்ட பிரதானம், தர்ப்பணம் என்கிற ஐந்து பகுதிகளும் இணைந்து வருகிறது. மற்ற நான்கு விதமான ஸ்ரார்த்தங்களில் இவைகள் அனைத்தும் வருவதில்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்தது பார்வன ஹோம ஸ்ரார்த்தமே. பரிபூரண புண்ணியத்தை, பலனை, பித்ருக்களின் திருப்தியை, ஆசியை கொடுக்கும். 

இப்போது உள்ள வாழ்க்கை முறையில் வீடுகளில் புகை வெளியேற வசதியின்மை, மிளகு சமையல் செய்யத் தெரியாமை, இடவசதி குறைவு முதலிய காரணங்களால் பார்வன ஹோம ஸ்ரார்த்தம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த குறையை போக்குவதற்கு ராமாபுரத்தில் ஸ்ரீராம தீர்த்தம் பின்புறம் உள்ள இடத்தில் நமது பித்ருக்களின் வருடாந்திர சிராத்தங்களை சிறப்பாக நடத்துவதர்க்கு" ஸ்ரீ ராமதீர்த்தம் பித்ரு சிராத்த மையம் " கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது பித்ரு கர்ம சிரேஷ்டர்கள் பித்ரு ஸ்ராத்த மையத்தை உபயோகபடுத்திகொள்ள வேண்டுகிறோம். இந்த காரிய மையத்தில் கிழ்காணும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 • காற்று வெளிச்சம் நிறைந்த அறைகள்
 • ஹோம புகை உடனடியாக வெளியேற Exhaust Fan
 • குளிப்பதற்கு வெந்நீர் சுத்திகரிக்கப்பட்ட நீர்
 • சமைக்க மற்றும் பருக - RO நீர்
 • ஒரே நாளில் 6 ஸ்ராத்தம் செய்ய வசதி
 • ப்ரதான சாலையிலிருந்து தனிப்பாதை
 • மடி சமையல் செய்து தர தகுதியான மாமிகள்
 • சமையல் பொருட்கள் பித்தளை பாத்திரங்கள்
 • Concealed Gas Pipeline
 • மாடியில் துணி உலர்த்த வசதி
 • சாப்பிடுவதற்கு Dining Hall Cum Table வசதி
 • Tiles பதித்த சுத்தமான அறைகள்
 • கிரானைட் பதித்த சமையல் மேடை
 • கர்த்தாவே சமையல் முதலிய செய்ய அனுமதி
 • மடி உபயோகத்திற்கு Direct Water
 • சுகாதாரம் நிறைந்த பராமரிப்பு
 • நியாயமான குறைந்த கட்டணம்