வேத பாட சாலைப் பற்றி

ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடாதிபதிஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அனுக்ரஹத்துடன் பரனூர்மஹாத்மா ஸ்ரீக்ருஷ்ண ப்ரேமி அண்ணா ஆசியுடன் நந்தனவரும் விஜயதசமி (24-10-2012) அன்று முதல் ஸ்ரீ வேத வித்யா ஆஸ்ரமத்தில் யஜுர்வேத பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சிறப்புற நடைபெற்று வருகிறது. மிக சிறந்த அத்யாபகரைக்கொண்டு சுமார் 15 வித்யார்த்திகளுக்கு உணவு,உடை,உறைவிடம் அளிக்கப்பட்டு சாகை, சம்ஹிதை, பதம், கிரமம், கணம் முதலிய வேத அத்யயணம் செய்விக்கப்படுகிறது. இரண்டு குழு(Batch) மாணவர்கள் வேத அத்யயணம்  பூர்த்தி செய்து (வேத படிப்பு முடிந்து) பரிட்சை கொடுத்து முதல் வகுப்பில் தேறி இருக்கிறார்கள்.ஆன்மீக வேத தர்மிஷ்டர்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்த வேத தர்மரஷணத்தில் தாங்களும் பங்கு கொண்டு த்ரவ்யசஹாயம் செய்து வேததர்மம் செழித்திட உதவி புரிந்து தாங்கள் குடும்ப, பரிவார சமேதம் சகல க்ஷேம லாபங்களையும் அடைந்திட ப்ராத்திக்கிறோம்.

         

                                                                 நாம் ஏன் வேதங்களை போற்றி வளர்க்கவேண்டும்?


நமது சநாதண ஹிந்து மதத்திற்கு ஆதாரம் வேதங்களே. வேத மந்திர கோஷத்தினாலேயே வழிபாடுகளில் தேவர்களை / தேவதைகளை/ தெய்வங்களை ஆவாஹனம் செய்ய முடிகிறது. வேத மந்த்ரங்களால் செய்யபடுகின்ற பூஜை, ஹோமம்,தர்ப்பணம், ஜபம் இவைகளால் ப்ரீதி அடைக்கின்ற தெய்வங்கள் விரைவாக நம் தேவைகளை / பிரார்த்தனைகளை அனுக்ரஹிக்கிறார்கள்.வேத மந்த்ரங்களைக் கொண்ட சிராத்தம் தர்ப்பணம் முதலியவைகளால் திருப்த்தி அடைகின்ற பித்ருக்கள் நம் சந்ததிகளுக்கு வம்சவ்ருத்தி முதலான சகல அபீஷ்டங்களையும் அனுக்ரஹிக்கிறார்கள். வேத மந்த்ரங்களால் செய்யப்படுகின்ற கும்பாபிஷேகம் முதலிய க்ரியைகளால் ஆலயங்களில் தெய்வ ஸான்னித்யம் ஏற்பட்டு தெய்வங்கள் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.


வேத பாராயணம் முதலியவற்றால் சாமான்ய ஜனங்களின் மனங்களில் ஏற்படும் காமக்ரோதாதி துர்குணங்கள் குறைந்து தேச அமைதி ஏற்படுகின்றது. வேத மந்த்ர கோஷ ஸ்ரவணத்தினால் நமது மன அழுத்தம் Tension முதலிய சிரமங்கள் குறைத்து மனசாந்தி ஏற்படுகின்றது. வேதத்தில் சொன்ன நல் கருத்துக்களை ஸ்தாபிக்கவே பகவான் ராம, கிருஷ்ணாதி அவதாரங்கள் எடுத்து தர்ம ரஷணம் செய்கிறார். வேதத்தின் உட்கருத்துகளையே இதிஹாச,புராண,நாடக, காவ்ய,தமிழ்மறை பாசுரங்கள் மறு பரப்பு செய்கின்றன.வேதத்தின் கர்ம காண்டங்களை மந்த்ரங்களைக் கொண்டு யாகம்,ஹோமம் செய்வதன் மூலமே சகல உலக நன்மைகளும் ஸ்வர்க்கம் முதலிய பரலோக நன்மைகளும், மழை முதலிய தேச நன்மைகளும் ஏற்படுகின்றன.வேதத்தின் ஞான காண்ட அர்த்தானுசந்தான அனுஷ்டானத்தின் மூலம் சித்த சுத்தியும், ஞான யோக்யதையும் ஏற்படுகின்றது.வேத பாராயண ஸ்ரவணத்தினால் சகல பாபங்களும் விலகுகிறது.வேத மந்த்ரங்களே தெய்வங்களுக்கு சாந்நித்யத்தையும் முனிவர்களுக்கு தபோபலத்தையும்,மனிதர்களுக்கு சகல விதமான ஆயுஸ் ஆரோக்ய மனோபீஷ்டங்களையும் கொடுக்கின்றது.

 

இப்படி சகல ஷேம லாபங்களையும் அனுக்ரஹிக்கக்கூடிய வேதங்களை ரக்ஷித்து போற்றி வளர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமையல்லவா! வேத மாதாவின் பரிபூரண க்ருபை பெற்று நம்மை உய்விக்கிற மற்றும் சகல நன்மைகளையும் பெற்று தரவல்ல வேத தர்ம ரஷண சேவையில் தாங்கள் பங்கு பெற அன்புடன் அழைக்கின்றோம்.வேத பாடசாலையின் ஒரு மாத செலவு Rs.60,000 ஒரு வித்யார்த்தி(மாணவன்)-க்கான மாத செலவு Rs.5000 ஒரு நாள் மூன்று வேலை உணவு அளிக்கக்கூடிய சமாராதணை நன்கொடை Rs. 1000 இவைகளில் ஏதாவது ஒரு தர்மத்தை ஏற்றுகொள்ள வேண்டுகிறோம்.ஆன்மீக வேத தர்மிஷ்டர்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்த வேத  தர்மரஷணத்தில் தாங்களும் பங்கு கொண்டு த்ரவ்யசஹாயம் செய்து வேததர்மம் செழித்திட உதவி புரிந்து தாங்கள் குடும்ப,பரிவார சமேதம் சகல ஷேம லாபங்களையும் அடைந்திட ப்ராத்திக்கிறோம்.காசோலைகள் SREE LOKHAKSHEMA TRUST என்ற பெயருக்கு கொடுக்கவும் 80G வரிவிலக்கு உண்டு